12.12.2022
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாரியம்மாள் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தகப்பனாருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் பள்ளிக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் PEC -ன் உதவியைக் கோரினார். அவருக்கு உதவும் படி அர் ரஹீம் வெல்ஃபேர் டிரஸ்ட் இடம் PEC கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அர் ரஹிம் வெல்ஃபேர் டிரஸ்ட் அவர்களுக்கு ரூ 5000 கல்வி உதவித் தொகை வழங்கியது. அல்லாஹ் அவர்களது கொடையை ஏற்று பரக்கத் செய்வானாக மேலும் மாணவியின் கல்வியில் வெற்றியைத் தந்தருள்வானாக ஆமின்