College Fees – Paid


26.12.2022

அஸ்ஸலாமு அலைக்கும்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு அவரது குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக இறுதி ஆண்டுக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்தது. PEC -ன் முயற்சி மற்றும் அல்லாஹ்வின் மாபெரும் கருணையினாலும் IDEA அமைப்பின் பெறும் உதவியாலும் அவரது கல்விக் கட்டணம் ரூ 40,000/- செலுத்தப்பட்டது.

மாணவர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்ந்த நிலையை அடையத் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.

நம் சமுதாயத்தை அனைத்து நிலைகளிலும் ( தீன், கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், சமூகம்) உயர்ந்த சமூகமாகக் கட்டமைப்பதில் நாம் அனைவரும் இணைந்து இருப்போம் .
நம் சமுதாயத்தில் கல்வியைக் கையில் எடுத்துக் கொண்டவர்கள் எல்லா நிலைகளிலும் சற்று மேம்பட்டவர்களாக உள்ளார்கள். குறிப்பிட்ட சதவீதத்தினர் புறக்கணித்து வீழ்ந்து விட்டார்கள் . அவர்களை உயர்த்துவது மிகவும் சவாலானதாக உள்ளது. ஆனால் அவர்களுக்கு உதவுவது நமது கடமை மேலும் ஆஃகிரத்துக்கான சேமிப்பாகவும் உள்ளது. எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடுதான். நாம் நம் கடமையைச் செய்வோம் மீதியை அல்லாஹ் பார்த்துக் கொள்வான். வஸ்ஸலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *