25.08.2023அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மருத்துவக் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்லூரிக் கட்டணம் ரூ 100000/- செலுத்தப்பட்டது.இந்த பொருளாதார உதவியை வழங்கிய TMAGC ( USA) நிறுவனத்திற்கு நன்றி . ஜசாக்கல்லாஹ் ஹைரன். மேலும் உறுதுணையாக இருந்த ஜனாப். இதாயத்துல்லாஹ் , ஜனாப். ரகுமான் அவர்களுக்கு மிக்க நன்றியை Pollachi Economic Chamber சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.அல்லாஹ் நமது நாட்டங்களையும் , முயற்சிகளையும் கபூல் செய்வானாக.🤲🤲 மாணவி அனைத்து நிலைகளிலும் வெற்றிபெற✨✨ துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ். வஸ்ஸலாம்
Masjid Representatives – Meetup |
அஸ்ஸலாமு அலைக்கும்.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று பள்ளிவாசல் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக , நெகிழ்ச்சியாக நடை பெற்றது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் நன்றி. ஜஸாக் அல்லாஹ் கைரன்
Congratulations to Shemina |
13.07.2023 அஸ்ஸலாமு அலைக்கும். இன்று PEC -ன் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல்.நமது PEC -ன் ஆதரவுடனும் , கடினமாக உழைத்தும் , ஈமானிய பலத்துடனும் அல்லாஹ்வின் பொருத்தத்துடனும், சிறப்பாகப் படித்து இன்று தமிழ் நாடு அரசில் இன்ஸ்பெக்டர் ஆப் ஃபிஸ்ஸரீஸ் என்ற பதவியைப் செமீனா என்ற பெண்மணி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு PEC சார்பாகவும் உங்கள் அனைவர் சார்பாகவும் வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ✨✨👏👏💐💐 வீசிய விதைகள் முளைக்கின்றன
Scholarship – IDEA |
19.01.2023 அஸ்ஸலாமு அலைக்கும். பொள்ளாச்சியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்லூரி மாணவி ஒருவருக்குக் கல்லூரி கட்டணம் ரூ 25000 /- வழங்கப்பட்டது. இந்த கல்விக் கட்டணத்தை வழங்கிய IDEA அமைப்பிற்கும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட PEC கல்வி குழுவிற்கும் நன்றி. மாணவி கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறவும் ,ஏராளமான தமிழக இஸ்லாமிய மாணவ மாணவியர் கல்வி பயில உதவிவரும் IDEA அமைப்பைச் சேர்ந்த சகோதரர்களின் இம்மை மறுமை வெற்றிக்காகவும் துவா செய்யுங்கள். கல்வியிலும் ( ஆன்மிகம் உள்ளடக்கிய) பொருளாதாரத்திலும் மேம்பட்ட ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது நோக்கத்தை அல்லாஹ் வெற்றிபெறச் செய்வானாக. ஆமின்
College Fees – Paid |
26.12.2022 அஸ்ஸலாமு அலைக்கும். பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு அவரது குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக இறுதி ஆண்டுக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்தது. PEC -ன் முயற்சி மற்றும் அல்லாஹ்வின் மாபெரும் கருணையினாலும் IDEA அமைப்பின் பெறும் உதவியாலும் அவரது கல்விக் கட்டணம் ரூ 40,000/- செலுத்தப்பட்டது. மாணவர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்ந்த நிலையை அடையத் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ். நம் சமுதாயத்தை அனைத்து நிலைகளிலும் ( தீன், கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், சமூகம்) உயர்ந்த சமூகமாகக் கட்டமைப்பதில் நாம் அனைவரும் இணைந்து இருப்போம் .நம் சமுதாயத்தில் கல்வியைக் கையில் எடுத்துக் கொண்டவர்கள் எல்லா நிலைகளிலும் சற்று மேம்பட்டவர்களாக உள்ளார்கள். குறிப்பிட்ட சதவீதத்தினர் புறக்கணித்து வீழ்ந்து […]
Medical Help |
16.12.2022 அஸ்ஸலாமு அலைக்கும். இன்று ஆனைமலையைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ரூ 5000 வழங்கப்பட்டது. மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தியிருந்த அவரது மகளுக்கு மீண்டும் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது. எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை நமது சமுதாய மாணவ மாணவியர் நிறுத்திவிடக்கூடாது என்பதில் PEC உறுதியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நாம் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். We should ensure that no school dropout happens in our society. உதவி செய்த சகோதரர்க்கும் ஆனைமலை சின்ன பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் இமாம் அவர்களுக்கும் நன்றி. நாம் இணைந்து பணியாற்றுவதால் பல நல்ல விஷயங்கள் சுலபமாக , சிறப்பாகச் செயல்படுத்த […]
Educational – Help |
12.12.2022 அஸ்ஸலாமு அலைக்கும். மாரியம்மாள் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தகப்பனாருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் பள்ளிக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் PEC -ன் உதவியைக் கோரினார். அவருக்கு உதவும் படி அர் ரஹீம் வெல்ஃபேர் டிரஸ்ட் இடம் PEC கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அர் ரஹிம் வெல்ஃபேர் டிரஸ்ட் அவர்களுக்கு ரூ 5000 கல்வி உதவித் தொகை வழங்கியது. அல்லாஹ் அவர்களது கொடையை ஏற்று பரக்கத் செய்வானாக மேலும் மாணவியின் கல்வியில் வெற்றியைத் தந்தருள்வானாக ஆமின்
Education – Help |
அஸ்ஸலாமு அலைக்கும். பொள்ளாச்சியைச் சேர்ந்த DME இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவருக்கு Fees செலுத்த முடியாமல் , Exam Hall Ticket கிடைக்காத சூழ்நிலையில் கல்வி நிறுவனத்திடம் பேசி Fees Rs 15000 குறைத்து வாங்கி, மீதி தொகையைச் செலுத்த 3 மாதம் கால அவகாசம் பெற்று, Exam எழுத அனுமதியும் வாங்கப்பட்டது. இதில் நமக்கு உதவியாக இருந்த Erode Economic Chamber ஜனாப் . இஸ்மாயில் அவர்களுக்கும், கல்வி நிறுவனத்திற்கும் PEC சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். Zasakallah kheir