Date : 11.02.2025 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… NGM கல்லூரி மாணவி ஒருவருக்கு இன்று கல்விக் கட்டணம் ரூ 12600 செலுத்தப்பட்டது.Thanks to Janab.Quidubdin and his friends.இன்ஷா அல்லாஹ் மாணவிக்காகவும் உதவி செய்யும் நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள்
போட்டித் தேர்வுக்கான பயிற்சிக் கட்டணம் ரூ 9000 செலுத்தப்பட்டது. |
Date 11.02.2025அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… பெண்மணி ஒருவருக்குப் போட்டித் தேர்வுக்கான பயிற்சிக் கட்டணம் ரூ 9000 செலுத்தப்பட்டது.பெண்மணி தேர்வில் வெற்றி பெற்று அரசு பதவி பெற துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.Thanks to Janab. Quidubdin and his friends.
Education fee paid for BSc fashion designing student |
31.08.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. PSG கலை அறிவியல் கல்லூரியில் BSc Fashion & Designing பயிலும் மாணவி ஒருவருக்கு ரூ 25000 கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது. THANKS TO IDEA for their continuous support. Because of them many students are fulfilling their Educational Dream. உங்களது துஆ 🤲அவர்களது வாழ்கையில் மேலும் சிறப்பு சேர்க்கும் இன்ஷா அல்லாஹ். ஆன்மிகம் ,கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் சிறந்த ஒரு வலிமையான சமூகத்தைக் கட்டமைக்கும் பணியில் இணைந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும் PEC சார்பாக நன்றிகள் பல.மனிதர்களுக்குள் இயல்பாக இருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள், கோப தாபங்கள் இவற்றைக் கடந்து இஸ்லாம் என்ற ஒற்றை கயிற்றைப் பற்றிக் கொண்டு இணைந்து🤝 […]
பொள்ளாச்சியைச் சேர்ந்த BCA., படிக்கும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கல்விக் கட்டணம் |
15.07.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பொள்ளாச்சியைச் சேர்ந்த BCA., படிக்கும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரி கல்விக் கட்டணம்ரூ 22950/- செலுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த வருடம் BCA மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டு அவர் கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது I T நிறுவனத்தில் பணியாற்றுகின்றார் . தொடர்ந்து மாணவ மாணவிகள் கல்வி வேலை வாய்ப்புகளில் வெற்றி பெற்று எல்லா நிலைகளிலும் முன்னேறவும் , கல்வி உதவித் தொகை வழங்கிய IDEA USA அமைப்புக்கும் , இந்த கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தரும் பணியை மேற்கொள்ளும் PEC கல்விக் குழுவுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.
College Fees Paid For Engineering Student |
25.06.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 47500/- செலுத்தப்பட்டது.கட்டணத்தைச் செலுத்தி உதவிய IDEA USA அமைப்புக்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.Jazakallah khair மாணவரின் வெற்றிக்காகவும், உதவிய நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Education Guidance Program |
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அல்ஹம்துலில்லாஹ் உங்கள் அனைவரது துஅ மற்றும் பங்களிப்புடன் +2 மாணவர்களுக்கான நேரடி one to one கலந்தாலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருந்த பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்குப் பாராட்டையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் .வழக்கம் போல மாணவிகள் அதிக அளவில் பங்கு பெற்றனர். மாணவிகளின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. மாணவிகளின் நலனில் தாய்மார்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது.குழந்தைகளில் இந்த ஆர்வம், உழைப்பு அரசு வழக்கியிருக்கும் சலுகைகள், குடும்பத்தின் பின் தங்கிய பொருளாதார சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் நல்ல கல்லூரியில் சேர்ந்து பயின்று அவர்களை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வெற்றி பெறச் செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
Blankets for Poor Peoples |
09.12.23அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில் சாலை ஓரங்களில், திறந்த வெளியில் உறங்கும் ஏழைகள், அனாதைகள் , ஆதரவற்றோர்களுக்கும், 2 மதரஸாக்கள் , 1 முதியோர் இல்லத்திற்கும் சுமார் 250 போர்வைகள் நமது சகோதரர் திரு. சுகுமார் அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது. இந்த போர்வைகளை வழங்கிய நமது PINKY LIFE STYLE – நிறுவனத்திற்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்🙏🙏👏👏💐💐
Help to Madrasa |
அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சேம்பரின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி அம்பராம்பாளையம் மதரசாவில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை இன்று மாலை ஜனாப் மாலிக் பாய் தலைமையில் மதரசாவில் கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டியாக லட்டு , வடை , பஜ்ஜி, டீ வழங்கப்பட்டது. மாணவர்கள் குஷியாக விளையாடி மகிழ்ந்தனர். இந்த விஷயத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சேம்பர் உறுப்பினர்கள் , மதரஸா ஆலிம்கள் ஆகியோருக்கு ஜஸாக்கல்லா ஹைர்.
|
07.10.2023 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பெண்மணி ஒருவரின் கணவர் சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டு Dialysis செய்யப்பட்டு வந்த போது அவருக்கு சிறிய அளவில் நிதி உதவி பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பரால் வழங்கப்பட்டது. பின்னர் சில மாதங்களில் அவர் மெளவ்த் ஆகி விட்டார். இந்த நிலையில் அவர் வைத்திருந்த LIC பாலிஸிக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த தவறியதால் அதற்கான கிளைம் தொகை பெண்மணிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இதற்காக PEC-ல் உள்ள Retired LIC உயர் அதிகாரியிடம் உதவி கோரினோம். அவர் தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து பெண்மணியின் கடினமான பொருளாதார சூழ்நிலையை நிறுவனத்திற்கு புரிய வைத்து அனுதாப அடிப்படையில் ரூ 50000 ✨✨கிடைக்க உதவி செய்தார். Thanks to Janab Rahman […]