21.06.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கு பற்றாக்குறையாக இருந்த கல்விக் கட்டணம் ரூ 10000 செலுத்தப்பட்டது. Thanks to Justice. Akbar Ali sir for accepting our PEC ‘S request and made payment in lightning ⚡ speed .Your help and Supporting words means a lot to the student. மாணவியின் வெற்றிக்கும்💐 உடனடியாக உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் துஆ🤲🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
College fees paid for medical student |
14.06.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 100000/- செலுத்தப்பட்டது.கட்டணத்தைச் செலுத்தி உதவிய IDEA USA அமைப்புக்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.Jazakallah khair மாணவியின் வெற்றிக்காகவும், உதவிய நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Education Help to Engineering Students |
25.11.2023 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நண்பர்களே, சகோதரர்களே இன்று பொள்ளாச்சியை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ 25000 மற்றும் திருப்பூரை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவருக்கு ௹ 25000 கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இரண்டு மாணவர்களின் மிகவும் எளிய பொருளாதார பின்புலம், முதல் தலைமுறை பட்டதாரிகள் மேலும் அவர்களது பெற்றோர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த உதவி வழங்க PEC முடிவு செய்தது. இதற்கான முழு தொகை ரூ 50000 -ம் வழங்கிய ஜனாப் . ஷேக் அன்சர் அவர்களுக்கு நன்றி zasakallah kheir. அல்லாஹ் உங்கள் உதவிக்கு நற்கூலி வழங்குவானாக. மாணவர்கள் எல்லா நிலைகளிலும் வெற்றி பெறவும்✨✨ கொடையாளருக்காகவும் துவா🤲🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Scholarship from IFT through the guidance of PEC |
23.10.2022 அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர்களே, நண்பர்களே பொள்ளாச்சியைச் சேர்ந்த PHARM D படிக்கும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரிக் கட்டணம் ரூ 70,000 செலுத்தப்பட்டது.✨✨ PEC மூலமாக விண்ணப்பிக்கப்பட்டு எங்கள் பரிந்துரையை ஏற்று இந்த SCHLORSHIP ஐ வழங்கி உதவிய IDEA அமைப்பிற்கும் அதன் அங்கத்தினர் அனைவருக்கும் எங்கள் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐 உங்களை எங்களுக்கு அறிமுகம் செய்து கொடுத்த மௌலானா Dr கலீல் அஹ்மது முனீரி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீன், கல்வி, பொருளாதாரம், சமூகம் இவற்றில் மேம்பாடு அடைவதை நோக்கமாகக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக PEC பயணிக்கிறது. இந்த பயணத்தில் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. Zasakallah kheir Alhamdulillah
Fund Raising – LLB Student Rs.59,500/- |
அஸ்ஸலாமு அலைக்கும். ஃபழிலா என்ற மாணவி 3 வருட LLB (Honours) படிப்பினை தமிழ்நாடு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளார்கள். அவர்களுக்குத் தேவை Rs 85000. அவர்களிடம் போதுமான நிதி இல்லை.நாம் அவர்களுக்கு ரூ 50,000 வரை வழங்க தீர்மானித்து அதற்கென அறிவிப்பு வெளியிட்டு சில மணிநேரங்களிலேயே நாம் எதிர்பார்த்த தொகையைவிட சற்று அதிகமாக 59,500/- நிதி வந்து சேர்ந்தது உங்கள் அனைவரின் கொடையுள்ளம் பாராட்டத்தக்கது அதிலும் விரைந்து உதவும் உங்கள் அனைவரின் எண்ணத்திற்கு வல்ல இறைவன் மகத்தான கூலி வழங்குவானாக.. ஃபழிலா என்ற மாணவியை ஒரு சிறந்த வழக்கறிஞராக்கிப் பார்க்கும் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்.
Education – Help |
15.07.2022 அஸ்ஸலாமு அலைக்கும். ரம்ஜான் பேகம் என்ற பெண்மணிக்கு 3 மகன்கள், அவரது உறவினருக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள். இந்த நிலையில் உறவினர் (கனவன் மனைவி இருவரும்) விபத்தில் மரணம் அடைந்திட அவர்களது 4 குழந்தைகளையும் இவர் பொருப்பில் எடுத்து வளர்க்கின்றார். ஒரு சிறிய ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டில் 10 பேர் வசிக்கின்றனர். குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் பயில்கின்றனர். அவர்களது அவசர தேவையான பள்ளி சீருடை, நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக் இவற்றை PEC வாங்கிக் கொடுத்துள்ளது. மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் நல்ல நிலைக்கு வரும் வரை தொடர்ந்து தேவை அடிப்படையில் உதவுவது என்று PEC – ஆல் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்ற […]
Education help |
25.06.2022 அஸ்ஸலாமு அலைக்கும் கோவையைச் சேர்ந்த சுஹைனா என்ற மாணவி MSc Counseling & psychotherapy, PG Diploma in Family Therapy இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல அறிவான திறமையான மாணவி. அவரது தந்தை உடல் நிலை சரியில்லாமல் நீண்ட நாட்களாகச் சிகிச்சையில் உள்ளார்கள். மாணவியால் இறுதி ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 68400/- செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் PEC ஐ அணுகினார். அவரது கல்விக் கட்டணம் முழுவதும் PEC ஆல் செலுத்தப்பட்டது. இவரைப் போன்ற திறமையான , பொறுப்பான மாணவ மாணவிகளுக்கு உதவுவதில் PEC பெருமை கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ். Thanks to Anish Builders for Donating entire amount
Psychological Counselling |
10.06..2022 அஸ்ஸலாமு அலைக்கும். வெள்ளிக்கிழமை( 10.06..2022 ) ஜும்மா வில் மஸ்ஜிதே முஹம்மது பள்ளி பொள்ளாச்சியில் Dr. அபுபக்கர் சித்தீக் , Psychologist அவர்கள் மன நலன் பேணுவது குறித்தும், மாணவர்கள் கல்வியில் கவனம் சிதறாமலும் , மனதை இலக்கை நோக்கி ஒருமுகப்படுத்தி வெற்றிபெறுவது குறித்தும் 10 நிமிட உரையாற்றினார்கள். அல்லாஹ் காட்டிய பாதையில் சென்று சமுதாயம் இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றியடைவதை நாம் உறுதி செய்யவேண்டும். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு . இன்ஸா அல்லாஹ் நமது பயணம் சீரிய பாதையில் தொடரட்டும் துவா செய்யுங்கள். Dr. அபுபக்கர் சித்தீக் அவர்கள் விரைவில் நமது PEC அலுவலகத்தில் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக ( இயலாதவர்களுக்கு) மன […]