அஸ்ஸலாமு அலைக்கும். ஃபழிலா என்ற மாணவி 3 வருட LLB (Honours) படிப்பினை தமிழ்நாடு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளார்கள். அவர்களுக்குத் தேவை Rs 85000. அவர்களிடம் போதுமான நிதி இல்லை.நாம் அவர்களுக்கு ரூ 50,000 வரை வழங்க தீர்மானித்து அதற்கென அறிவிப்பு வெளியிட்டு சில மணிநேரங்களிலேயே நாம் எதிர்பார்த்த தொகையைவிட சற்று அதிகமாக 59,500/- நிதி வந்து சேர்ந்தது உங்கள் அனைவரின் கொடையுள்ளம் பாராட்டத்தக்கது அதிலும் விரைந்து உதவும் உங்கள் அனைவரின் எண்ணத்திற்கு வல்ல இறைவன் மகத்தான கூலி வழங்குவானாக.. ஃபழிலா என்ற மாணவியை ஒரு சிறந்த வழக்கறிஞராக்கிப் பார்க்கும் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்.
Education – Help |
15.07.2022 அஸ்ஸலாமு அலைக்கும். ரம்ஜான் பேகம் என்ற பெண்மணிக்கு 3 மகன்கள், அவரது உறவினருக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள். இந்த நிலையில் உறவினர் (கனவன் மனைவி இருவரும்) விபத்தில் மரணம் அடைந்திட அவர்களது 4 குழந்தைகளையும் இவர் பொருப்பில் எடுத்து வளர்க்கின்றார். ஒரு சிறிய ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டில் 10 பேர் வசிக்கின்றனர். குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் பயில்கின்றனர். அவர்களது அவசர தேவையான பள்ளி சீருடை, நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக் இவற்றை PEC வாங்கிக் கொடுத்துள்ளது. மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் நல்ல நிலைக்கு வரும் வரை தொடர்ந்து தேவை அடிப்படையில் உதவுவது என்று PEC – ஆல் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்ற […]
Education help |
25.06.2022 அஸ்ஸலாமு அலைக்கும் கோவையைச் சேர்ந்த சுஹைனா என்ற மாணவி MSc Counseling & psychotherapy, PG Diploma in Family Therapy இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல அறிவான திறமையான மாணவி. அவரது தந்தை உடல் நிலை சரியில்லாமல் நீண்ட நாட்களாகச் சிகிச்சையில் உள்ளார்கள். மாணவியால் இறுதி ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 68400/- செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் PEC ஐ அணுகினார். அவரது கல்விக் கட்டணம் முழுவதும் PEC ஆல் செலுத்தப்பட்டது. இவரைப் போன்ற திறமையான , பொறுப்பான மாணவ மாணவிகளுக்கு உதவுவதில் PEC பெருமை கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ். Thanks to Anish Builders for Donating entire amount
Psychological Counselling |
10.06..2022 அஸ்ஸலாமு அலைக்கும். வெள்ளிக்கிழமை( 10.06..2022 ) ஜும்மா வில் மஸ்ஜிதே முஹம்மது பள்ளி பொள்ளாச்சியில் Dr. அபுபக்கர் சித்தீக் , Psychologist அவர்கள் மன நலன் பேணுவது குறித்தும், மாணவர்கள் கல்வியில் கவனம் சிதறாமலும் , மனதை இலக்கை நோக்கி ஒருமுகப்படுத்தி வெற்றிபெறுவது குறித்தும் 10 நிமிட உரையாற்றினார்கள். அல்லாஹ் காட்டிய பாதையில் சென்று சமுதாயம் இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றியடைவதை நாம் உறுதி செய்யவேண்டும். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு . இன்ஸா அல்லாஹ் நமது பயணம் சீரிய பாதையில் தொடரட்டும் துவா செய்யுங்கள். Dr. அபுபக்கர் சித்தீக் அவர்கள் விரைவில் நமது PEC அலுவலகத்தில் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக ( இயலாதவர்களுக்கு) மன […]
Education – Help |
பாத்திமா என்ற சகோதரியின் கணவர் இறந்து 6வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளார் இவருடைய குழந்தையின் பள்ளிக் கல்விக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது மேலும் இந்த சகோதரி தனது கல்வியைத் தொடரவும் அவருக்கு உதவி செய்யப்பட்டது அத்துடன் அவரே சுயமாக தொழில் தொடங்குவதற்கான உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது அவருடைய குடும்பத்திற்கான அரசின் காப்பீடு மற்றும் சிறுபான்மையினருக்கான உதவித்தொகை பெறுவதற்குமான உதவிகள் PEC மூலமாக செய்யப்படுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
Education Help for Poor Girl in Anaimalai |
20.04.2022 அஸ்ஸலாமு அலைக்கும் மீண்டும் ஒரு மகிழ்ச்சியான வெற்றி செய்தியுடன்✨✨ உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதில் PEC மகிழ்கிறது. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், நீங்கள் கொடுக்கும் ஆதரவினாலும் 🤝🤝, PEC மேற்கொண்ட முயற்சியின் பயனாக ஆனைமலையைச் சேர்ந்த ரக்சானா பர்வீன் என்ற பெண் Homeopathy மருத்துவ படிப்புக்குத் தேர்வாகியுள்ளார்கள். அவரது தகப்பனார் சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்கிறார்கள். நமது பகுதி இஸ்லாமிய மாணவர்களோ, மாணவிகளோ உயர் கல்வி கற்க எந்த விதத்திலும் பொருளாதாரம் ஒரு தடையாகி விடக் கூடாது என்பதில் PEC அதிக கவனமுடன் ஈடுபட்டு உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நம் சமுதாயம் முன்னேற பாடுபடுவதை தாங்கள் அறிவீர்கள். தற்போது மீண்டும் நம் ஆதரவை ரக்சானா அவர்களுக்கு வழங்கி மகிழ்வோம். Actual college fees for 1 St year Rs 150000. […]
Financial Help for Dental Student |
தாராபுரத்தை சார்ந்த மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல் மருத்துவப் படிப்பில் தன்னுடைய ஏழ்மை நிலையினால் சேர முடியாமல் தவித்த மாணவி தஸ்லீம் அவர்கள் நம் Pollachi Economic Chambersயை நாடியிருந்தார், இரண்டே நாட்களில் நம் PECன் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு இடங்களிலுள்ள நம் நண்பர்கள் அனைவரும் உதவி செய்ததால் இரண்டே நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை இறைவன் அருளாள் அடைய முடிந்தது உதவிய அனைவரி ன் குடும்பத்திற்கும் வல்ல இறைவன் அருள் புரிவானாக.. உதவியவர்களின் விபரம்: Target 100000 Malik 5000 Sanoj 500 Janab Nijamulla 500 Janab.Hilal 500 Janab. Ashan 200 Janab. Jaffer 2000 Janab jahir 1000 Janab Amir […]
Education Fund |
நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் நம்மால் அவ்வப்போது நமது சகோதர சகோதரிகளின் சில முக்கிய பொருளாதார தேவைகளுக்காக உதவ முடிகிறது. அல்லாஹ் நம் எல்லோரையும் கொடுக்கும் நிலையிலேயே வைத்திருப்பானாக. ஆமின். தற்போது பாத்திமா என்ற மாணவி +2 -ல் 565/600 மதிப்பெண் எடுத்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ECE படிப்புக்கான இடம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கான ஒரு வருடக் கல்விக் கட்டணம் ரூ 125000 மாக உள்ளது . இதில் இதுவரை ரூ 77500 அவரது தந்தையின் முயற்சியில் பல் வேறு கொடையாளர்களின் உதவியால் பெறப்பட்டு விட்டது. மீதி ரூ 47500 ஐ அவர் திங்கள் கிழமை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும். தீர விசாரித்த வரையில் குடும்பத்தினரிடம் எந்த பொருளாதாரமும் இல்லை. […]
Smart Donation |
Pollachi Economic Chamber gawe away a used and refurbished mobile phone to a student Jamuna Rani to attend her online classes, who is studying 1st year B.Com. Thanks to Mr.Anbuselvan, who refered this student student and donor is Mr.Mohamed