14.06.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 100000/- செலுத்தப்பட்டது.கட்டணத்தைச் செலுத்தி உதவிய IDEA USA அமைப்புக்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.Jazakallah khair மாணவியின் வெற்றிக்காகவும், உதவிய நல் உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Author Archives: pecadmin
Education Guidance Program |
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அல்ஹம்துலில்லாஹ் உங்கள் அனைவரது துஅ மற்றும் பங்களிப்புடன் +2 மாணவர்களுக்கான நேரடி one to one கலந்தாலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருந்த பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்குப் பாராட்டையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் .வழக்கம் போல மாணவிகள் அதிக அளவில் பங்கு பெற்றனர். மாணவிகளின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. மாணவிகளின் நலனில் தாய்மார்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது.குழந்தைகளில் இந்த ஆர்வம், உழைப்பு அரசு வழக்கியிருக்கும் சலுகைகள், குடும்பத்தின் பின் தங்கிய பொருளாதார சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் நல்ல கல்லூரியில் சேர்ந்து பயின்று அவர்களை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வெற்றி பெறச் செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
Blankets for Poor Peoples |
09.12.23அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில் சாலை ஓரங்களில், திறந்த வெளியில் உறங்கும் ஏழைகள், அனாதைகள் , ஆதரவற்றோர்களுக்கும், 2 மதரஸாக்கள் , 1 முதியோர் இல்லத்திற்கும் சுமார் 250 போர்வைகள் நமது சகோதரர் திரு. சுகுமார் அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது. இந்த போர்வைகளை வழங்கிய நமது PINKY LIFE STYLE – நிறுவனத்திற்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்🙏🙏👏👏💐💐
Education Help to Engineering Students |
25.11.2023 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நண்பர்களே, சகோதரர்களே இன்று பொள்ளாச்சியை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ 25000 மற்றும் திருப்பூரை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவருக்கு ௹ 25000 கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இரண்டு மாணவர்களின் மிகவும் எளிய பொருளாதார பின்புலம், முதல் தலைமுறை பட்டதாரிகள் மேலும் அவர்களது பெற்றோர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த உதவி வழங்க PEC முடிவு செய்தது. இதற்கான முழு தொகை ரூ 50000 -ம் வழங்கிய ஜனாப் . ஷேக் அன்சர் அவர்களுக்கு நன்றி zasakallah kheir. அல்லாஹ் உங்கள் உதவிக்கு நற்கூலி வழங்குவானாக. மாணவர்கள் எல்லா நிலைகளிலும் வெற்றி பெறவும்✨✨ கொடையாளருக்காகவும் துவா🤲🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Help to Madrasa |
அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சேம்பரின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி அம்பராம்பாளையம் மதரசாவில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை இன்று மாலை ஜனாப் மாலிக் பாய் தலைமையில் மதரசாவில் கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டியாக லட்டு , வடை , பஜ்ஜி, டீ வழங்கப்பட்டது. மாணவர்கள் குஷியாக விளையாடி மகிழ்ந்தனர். இந்த விஷயத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சேம்பர் உறுப்பினர்கள் , மதரஸா ஆலிம்கள் ஆகியோருக்கு ஜஸாக்கல்லா ஹைர்.
|
07.10.2023 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பெண்மணி ஒருவரின் கணவர் சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டு Dialysis செய்யப்பட்டு வந்த போது அவருக்கு சிறிய அளவில் நிதி உதவி பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பரால் வழங்கப்பட்டது. பின்னர் சில மாதங்களில் அவர் மெளவ்த் ஆகி விட்டார். இந்த நிலையில் அவர் வைத்திருந்த LIC பாலிஸிக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்த தவறியதால் அதற்கான கிளைம் தொகை பெண்மணிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இதற்காக PEC-ல் உள்ள Retired LIC உயர் அதிகாரியிடம் உதவி கோரினோம். அவர் தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து பெண்மணியின் கடினமான பொருளாதார சூழ்நிலையை நிறுவனத்திற்கு புரிய வைத்து அனுதாப அடிப்படையில் ரூ 50000 ✨✨கிடைக்க உதவி செய்தார். Thanks to Janab Rahman […]
Education – Help |
11.09.2023 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உடுமலையைச் சேர்ந்த மாணவர் BE (Electronics and Instrumentation Engineering) பயின்று வருகிறார். அவரது தந்தை பெயிண்டிங் வேலை பார்த்து வரும் நிலையில் கல்லூரிக் கட்டணம் செலுத்த இயலவில்லை. மாணவரின் கல்வி ஆர்வம் மற்றும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது கல்லூரிக் கட்டணம் ரூ 47500 முழுதும் செலுத்தப்பட்டது. இந்த தொகையை வழங்கிய IDEA ( USA) நிறுவனத்திற்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் ( PEC) சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவரின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும்,✨✨✨ கொடையாளர்களுக்காகவும் துவா 🤲🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
Education Help |
02.09.2023 அஸ்ஸலாமு அலைக்கும் . திருப்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர், குடும்பத்திற்க்கு தேவையான வருமானம் இல்லாத சூழ்நிலையில், பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே +2 -ல் நல்ல மதிப்பெண் பெற்று PEC -ன் வழிகாட்டுதலுடன் NGM கல்லூரியில்BSc., CT படிப்பில் சேர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து பகுதி நேர வேலைக்குச் செல்ல முடியாது, மேலும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கருதி அவரது ஓராண்டு கல்விக் கட்டணம் முழுவதும் ரூ 44100 /-அவருக்கு வழங்கப்பட்டது. அவரது கல்விக் கட்டணத்தைச் செலுத்திய IDEA (USA) நிறுவனத்திற்குப் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் (PEC) சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மாணவி தன் வாழ்கையில் எல்லா நிலைகளிலும் வெற்றியடையத் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்
College Fees – Paid |
25.08.2023அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மருத்துவக் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்லூரிக் கட்டணம் ரூ 100000/- செலுத்தப்பட்டது.இந்த பொருளாதார உதவியை வழங்கிய TMAGC ( USA) நிறுவனத்திற்கு நன்றி . ஜசாக்கல்லாஹ் ஹைரன். மேலும் உறுதுணையாக இருந்த ஜனாப். இதாயத்துல்லாஹ் , ஜனாப். ரகுமான் அவர்களுக்கு மிக்க நன்றியை Pollachi Economic Chamber சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.அல்லாஹ் நமது நாட்டங்களையும் , முயற்சிகளையும் கபூல் செய்வானாக.🤲🤲 மாணவி அனைத்து நிலைகளிலும் வெற்றிபெற✨✨ துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ். வஸ்ஸலாம்