A women entrepreneur got the funding from MWAS through our PECNow the women started a new vegetable shop as a startup
Author Archives: pecadmin
Sewing machine to Poor Entrepreneur |
9.11.2022 அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர்களே சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்மணி ஒருவர் தையல் இயந்திரம் வேண்டும் என்று PEC-யிடம் கேட்டிருந்தார். அவருக்குப் பொள்ளாச்சியில் உள்ள மேற்கரம் தொண்டு நிறுவனம் ரூ 15000 மதிப்புள்ள தையல் இயந்திரத்தை வழங்கி உதவியுள்ளார்கள்✨✨✨மேற்கரம் தொண்டு நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர்களுக்கும் உங்கள் சார்பாகவும் PEC சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்💐💐. பெண்மணி அவர்கள் சுயமாகத் தையல் தொழில் மேற்கொண்டு முன்னேறிக் கொள்ள அனைவரும் துவா🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நாம் இணைந்து இருந்தால் ,சற்று விழிப்புடன் இருந்தால், இப்படி நமக்கு நாமே உதவிக் கொண்டு முன்னேறிவிட முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.🤝 நம்மிடம் எல்லாமே இருக்கிறது முறையாக அனைத்து வளங்களையும் […]
Scholarship from IFT through the guidance of PEC |
23.10.2022 அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர்களே, நண்பர்களே பொள்ளாச்சியைச் சேர்ந்த PHARM D படிக்கும் மாணவர் ஒருவருக்குக் கல்லூரிக் கட்டணம் ரூ 70,000 செலுத்தப்பட்டது.✨✨ PEC மூலமாக விண்ணப்பிக்கப்பட்டு எங்கள் பரிந்துரையை ஏற்று இந்த SCHLORSHIP ஐ வழங்கி உதவிய IDEA அமைப்பிற்கும் அதன் அங்கத்தினர் அனைவருக்கும் எங்கள் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐 உங்களை எங்களுக்கு அறிமுகம் செய்து கொடுத்த மௌலானா Dr கலீல் அஹ்மது முனீரி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீன், கல்வி, பொருளாதாரம், சமூகம் இவற்றில் மேம்பாடு அடைவதை நோக்கமாகக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக PEC பயணிக்கிறது. இந்த பயணத்தில் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. Zasakallah kheir Alhamdulillah
Fund Raising – LLB Student Rs.59,500/- |
அஸ்ஸலாமு அலைக்கும். ஃபழிலா என்ற மாணவி 3 வருட LLB (Honours) படிப்பினை தமிழ்நாடு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளார்கள். அவர்களுக்குத் தேவை Rs 85000. அவர்களிடம் போதுமான நிதி இல்லை.நாம் அவர்களுக்கு ரூ 50,000 வரை வழங்க தீர்மானித்து அதற்கென அறிவிப்பு வெளியிட்டு சில மணிநேரங்களிலேயே நாம் எதிர்பார்த்த தொகையைவிட சற்று அதிகமாக 59,500/- நிதி வந்து சேர்ந்தது உங்கள் அனைவரின் கொடையுள்ளம் பாராட்டத்தக்கது அதிலும் விரைந்து உதவும் உங்கள் அனைவரின் எண்ணத்திற்கு வல்ல இறைவன் மகத்தான கூலி வழங்குவானாக.. ஃபழிலா என்ற மாணவியை ஒரு சிறந்த வழக்கறிஞராக்கிப் பார்க்கும் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான்.
Eye – Medical Camp |
16.10.2022 அஸ்ஸலாமு அலைக்கும். மஸ்ஜிதே முஹம்மது (ஸல்) பள்ளிவாசல், பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய கண் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். நிகழ்சியில் சுமார் 123 பேர் முருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்த மேதிராபுரம் தேவ திருச் சபையை சேர்ந்த பாதிரியார். செல்வராஜ், முன்னால் தலைவர் சூளேஸ்வரன்பட்டி திரு.சந்திரமோகன் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் டாக்டர். சர்மிளா அவர்களுக்கு திருக்குரான் தர்ஜ்ஜுமா, நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சிறக்க பாடுபட்ட பள்ளி நிர்வாகம், PEC social wing அமீர் ஜனாப். சாகீர் கான், கண் சிகிச்சை […]
450 Womens received PEC’S Help |
அஸ்ஸலாமு அலைக்கும், நண்பர்களே, சகோதரர்களே இன்று பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொள்ளாச்சி பகுதி இஸ்லாமியப் பெண்களுக்கு அவர்கள் சிறு வியாபாரம் செய்து வாழ்கையில் முன்னேறிக் கொள்ளத் தமிழக அரசின் முஸ்லீம் உதவும் சங்கத்தின் மூலம் அடிப்படை முதலீட்டுத் தொகையை( seed capital ) வழங்கியது. இதில் இது வரை சுமார் 450 பெண்கள் பயனடைந்து உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இத்தகைய சேவைகளைச் செய்ய உதவியாக இருந்த கொடையாளர்கள்,அரசு அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், உலமாக்கள், ஜமாத்தார்கள், இயக்கங்கள், அமைப்புகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நம் சேவை பயணம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் துவாவுடனும் தொடரும் இன்ஷா அல்லாஹ்
Food Help- Srilankan Refugees |
14.09.2022 அஸ்ஸலாமு அலைக்கும். இன்று அழகிய முன் மாதிரி அறக்கட்டளையின் பசியாற்றுவோம் திட்டத்திற்கு 10 இலங்கை வாழ் இஸ்லாமியக் குடும்பங்களின் உணவு தேவைக்காக ரூ 5000 பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மூலம் வழங்கப்பட்டது. Thanks to the donar doctor,PEC member
Medical Aid |
அஸ்ஸலாமு அலைக்கும். 65 வயதான மீன் வியாபாரி, இவர் open Heart surgery செய்துள்ளார். அதனால் வாரத்தில் இரண்டு நாள் தான் வியாபாரத்திற்குச் செல்ல முடிகிறது. இவருக்கு மாதம் ரூ 800 க்கு மருந்து உட் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக உதவி கோரினார். 3 மாத மருந்து செலவுக்கான தொகை Rs 2500 PEC-ஆல் வழங்கப்பட்டது.