அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் அனைவரது துஅ மற்றும் பங்களிப்புடன் +2 மாணவர்களுக்கான நேரடி one to one கலந்தாலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருந்த பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்குப் பாராட்டையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
வழக்கம் போல மாணவிகள் அதிக அளவில் பங்கு பெற்றனர். மாணவிகளின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது. மாணவிகளின் நலனில் தாய்மார்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது.
குழந்தைகளில் இந்த ஆர்வம், உழைப்பு அரசு வழக்கியிருக்கும் சலுகைகள், குடும்பத்தின் பின் தங்கிய பொருளாதார சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் நல்ல கல்லூரியில் சேர்ந்து பயின்று அவர்களை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வெற்றி பெறச் செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.