அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சேம்பரின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி அம்பராம்பாளையம் மதரசாவில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை இன்று மாலை ஜனாப் மாலிக் பாய் தலைமையில் மதரசாவில் கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டியாக லட்டு , வடை , பஜ்ஜி, டீ வழங்கப்பட்டது. மாணவர்கள் குஷியாக விளையாடி மகிழ்ந்தனர். இந்த விஷயத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சேம்பர் உறுப்பினர்கள் , மதரஸா ஆலிம்கள் ஆகியோருக்கு ஜஸாக்கல்லா ஹைர்.