16.12.2022
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று ஆனைமலையைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ரூ 5000 வழங்கப்பட்டது.
மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தியிருந்த அவரது மகளுக்கு மீண்டும் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.
எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை நமது சமுதாய மாணவ மாணவியர் நிறுத்திவிடக்கூடாது என்பதில் PEC உறுதியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நாம் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். We should ensure that no school dropout happens in our society.
உதவி செய்த சகோதரர்க்கும் ஆனைமலை சின்ன பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் இமாம் அவர்களுக்கும் நன்றி.
நாம் இணைந்து பணியாற்றுவதால் பல நல்ல விஷயங்கள் சுலபமாக , சிறப்பாகச் செயல்படுத்த முடிகிறது.
பெண்மணி அவர்கள் விரைவில் உடல் ஆரோக்கியம் பெறவும் மாணவி கல்வியில் சிறக்கவும் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.