12.09.2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
VSB college of Engineering -ல் BE( CSE) கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கல்விக் கட்டணம் ரூ 75000 /- செலுத்தப் பட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து வேலை வாய்ப்புகளைப் பெற்று அவர்களது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்து கண்ணியமான வாழ்க்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்படும் IDEA மற்றும் Pollachi Economic chamber ஐ தங்களது துஆ -ல் சேர்த்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்
வெளிநாட்டில் வேலை செய்யும் சகோதரர்கள் இணைந்து ஒரு கட்டமைப்புடன் Organised ஆக உதவ முடிகிறது எனில் நம்மிடையே உள்ள செல்வந்தர்கள் நம்மிடையே உள்ள பள்ளிவாசல் என்ற கட்டமைப்பைப் பயன்படுத்தி இது போன்ற இலக்குகளைத் தீர்மானித்து ( தீன், கல்வி , வேலை வாய்ப்பு, வியாபாரம், வட்டி இல்லா கடன் நிதியம், மருத்துவம் ) செயல்பட்டால் சமூகம் விரைவில் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இன்ஷா அல்லாஹ்.
தற்போது நமது இஸ்லாமியச் சமூகத்தில் பல்வேறு தளங்களில் எழுச்சி ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்