நாள்:28/11/2021 ஞாயிற்றுக்கிழமை.
காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணிவரை
பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மகளிர் மன்றம் மற்றும் மஸ்ஜிதே ரஹ்மானியா காலனி பள்ளிவாசல் இணைந்து நடத்திய “மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான” இலவச மருத்துவ முகாம் அல்லாவின் கிருபையால் நல்லபடியாக நடைபெற்றது.
விழாவை காலனி பள்ளிவாசல் முத்தவல்லி ஜனாப்.A.பத்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி தந்தார்கள்.
ஹாேமியோ மருத்துவ முகாமை திரு.S.சந்திரமோகன் அவர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் சூளேஸ்வரன்பட்டி துவக்கி வைத்தார்கள்.
பல் மருத்துவ முகாமை திரு.N.கார்த்திகேயன் அவர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் சூளேஸ்வரன்பட்டி துவக்கி வைத்தார்கள்.
ஹோமியோபதி மருத்துவ முகாமில் 64 மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
பல் மருத்துவ முகாமில் 25 மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டு பல் பராமரிப்பு சம்மந்தமான ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மகளிர் மன்றத்தை சார்ந்த Dr.ஃபவ்ஷா மற்றும் Dr.சுஹானா ஃபரீத் அவர்கள் பங்கெடுத்து மருத்துவ முகாமை மிகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் கனிவுடனும் நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்கினார்கள்.அவர்களின் இந்த சமூக நலனுக்கான சேவையை அல்லா பொருந்திக்கொள்வானாக.அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஸாகல்லாஹீ கைரன்…
இந்த முகாமை நடத்த காலனி பள்ளிவாசல் வளாகத்தை தந்து உதவிய மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஸாகல்லாஹீ கைரன்…
மற்றும் இந்த முகாம் சிறப்பாக வெற்றியடைய தங்களுடைய உழைப்பை அளித்த PEC இன் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைதெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஸாகல்லாஹீ கைரன்…
அல்ஹம்து லில்லா…
வஸ்ஸலாம்
V.சாகிர் கான்
மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர்
Pollachi Economic chamber(Social wing)