3/02/2022 மஸ்ஜிதே நூர் சுன்னத்வல் ஜமாஅத் வஞ்சியாபுரம் பிரிவு மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மகளிர் பிரிவு இணைந்து நடத்திய அனைத்து சமுதாய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை முகாம் காலை 10மணி முதல் மதியம் 3 மணிவரை அல்லாஹ்வின் கிருபையைகொண்டு நல்ல முறையில் நடைபெற்றது.
40 நபர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.அவர்களுக்கு இலவச ஆலோசனையும் மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாமிற்கு ஜனாப்.I.ஷேக் முஸ்தபா அவர்கள் (முன்னாள் முத்தவல்லி, மஸ்ஜிதே நூர் சுன்னத் வல் ஜமாஅத்,வஞ்சியாபுரம் பிரிவு ) தலைமை வகித்தார்கள்.
ஜனாப்.ஹாஜி.M.தாவூத் அவர்கள்
(துணை ஆய்வாளர்(ஓய்வு),தமிழ்நாடு காவல்துறை) முன்னிலை வகித்தார்கள்.
ஜனாப்.குதுப்புதீன் அவர்கள்
(பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பரின் சமூக நல்லிணக்க மேம்பாடு பிரிவு அமீர் )
வரவேற்புரையாற்றினார்கள்.
ஜனாப்.Er.A.சம்சுதீன் அவர்கள்(ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர்) பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.
Dr .ஃபவ்ஷா அவர்கள்(தலைமை மருத்துவர்,கேர் ஜோன் ஹோமியோபதி கிளினிக்,குமரன் நகர்,பொள்ளாச்சி) மருத்துவ முகாம் ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஜனாப்.U.முஹம்மது நௌஷாத் அவர்கள்(தலைவர்,மஸ்ஜிதே நூர் சுன்னத் வல் ஜமாஅத்,வஞ்சியாபுரம் பிரிவு)
ஹோமியோ மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள்.
ஜனாப்.S.காஜா முகையதீன் அவர்கள்(செயலாளர்,மஸ்ஜிதே நூர் சுன்னத் வல் ஜமாஅத்,வஞ்சியாபுரம் பிரிவு)நன்றியுரையாற்றினார்கள்.
மருத்துவ முகாம் துவக்க விழாவில் ஜமாத்தார்களும் மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் உறுப்பினர்களும் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஜனாப்.நதீம் அவர்கள்(பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் I T wing அமீர்)தொகுத்து வழங்கினார்கள்.
இந்த முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் மற்றும் முகாமிற்கு இட வசதி கொடுத்த ஜமாஅத் நிர்வாகத்திற்கும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஸாகல்லாஹீ கைரன்.
வஸ்ஸலாம்
சாகிர் கான்.V
சமூக மேம்பாட்டு குழு மற்றும் மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர்.