Education – Help


15.07.2022

அஸ்ஸலாமு அலைக்கும்.

ரம்ஜான் பேகம் என்ற பெண்மணிக்கு 3 மகன்கள், அவரது உறவினருக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள். இந்த நிலையில் உறவினர் (கனவன் மனைவி இருவரும்) விபத்தில் மரணம் அடைந்திட அவர்களது 4 குழந்தைகளையும் இவர் பொருப்பில் எடுத்து வளர்க்கின்றார். ஒரு சிறிய ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டில் 10 பேர் வசிக்கின்றனர். குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் பயில்கின்றனர்.

அவர்களது அவசர தேவையான பள்ளி சீருடை, நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக் இவற்றை PEC வாங்கிக் கொடுத்துள்ளது. மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் நல்ல நிலைக்கு வரும் வரை தொடர்ந்து தேவை அடிப்படையில் உதவுவது என்று PEC – ஆல் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களை போன்ற வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இஸ்லாமியர்களை தனவான்கள் உதவியுடன் நல்ல கல்வியை கொடுத்து மீட்டெடுப்பது நமது அனைவரது கடமை என்பதை PEC உணர்ந்து செயல்படுகிறது. இந்த குடும்பத்திற்காக துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.

Thanks to Donar Janab. Nizar. Blue Sky

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *