15.11.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… இன்று நமது பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் அதீத வட்டி மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்திற்க்குநமது “PEC – FFDI’(Freedom from Debt & Interest)திட்டத்தின் கீழ் கணவரை இழந்த இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட ஒரு பெண்மணியின் கடன் செலுத்தப்பட்டது.இதன் மூலம் ரூ 2000 மாத வட்டியிலிருந்தும் மன உளைச்சலில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தனது ஜகாத் தொகையை கொடுத்து உதவிய சகோதரி ஜபீன் அவர்களுக்கு நன்றி. PEC உறுப்பினர்களே உதவும் கரங்களையும் உதவி தேடும் கரங்களையும் ஒன்று சேருங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரகமத் செய்வானாக
Seed capital funding to poor women |
04.07.2024 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மற்றும் கோவை முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் இணைந்து செயல்படுத்தி வரும் முஸ்லீம் பெண்களுக்குச் சிறு தொழில் செய்து முன்னேறிக் கொள்வதற்காக SEED CAPITAL வழங்கப்பட்டு வருகிறது.இதில் பயன் பெற்ற பயனாளி ஒருவர் புதியதாகக் காலணி வியாபாரத்தைத் துவங்கிவிட்டு அதனை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ் அவரது வியாபாரம் சிறக்கவும் இது போன்ற திட்டங்களுக்கு நன்கொடை அளித்த கொடையாளர்களுக்கும் அதனைச் செயல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ். Visit www.pollachieconomicchamber.com
Sewing machine to Poor Entrepreneur |
9.11.2022 அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர்களே சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்மணி ஒருவர் தையல் இயந்திரம் வேண்டும் என்று PEC-யிடம் கேட்டிருந்தார். அவருக்குப் பொள்ளாச்சியில் உள்ள மேற்கரம் தொண்டு நிறுவனம் ரூ 15000 மதிப்புள்ள தையல் இயந்திரத்தை வழங்கி உதவியுள்ளார்கள்✨✨✨மேற்கரம் தொண்டு நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர்களுக்கும் உங்கள் சார்பாகவும் PEC சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்💐💐. பெண்மணி அவர்கள் சுயமாகத் தையல் தொழில் மேற்கொண்டு முன்னேறிக் கொள்ள அனைவரும் துவா🤲 செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நாம் இணைந்து இருந்தால் ,சற்று விழிப்புடன் இருந்தால், இப்படி நமக்கு நாமே உதவிக் கொண்டு முன்னேறிவிட முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.🤝 நம்மிடம் எல்லாமே இருக்கிறது முறையாக அனைத்து வளங்களையும் […]
Eye – Medical Camp |
16.10.2022 அஸ்ஸலாமு அலைக்கும். மஸ்ஜிதே முஹம்மது (ஸல்) பள்ளிவாசல், பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய கண் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். நிகழ்சியில் சுமார் 123 பேர் முருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்த மேதிராபுரம் தேவ திருச் சபையை சேர்ந்த பாதிரியார். செல்வராஜ், முன்னால் தலைவர் சூளேஸ்வரன்பட்டி திரு.சந்திரமோகன் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் டாக்டர். சர்மிளா அவர்களுக்கு திருக்குரான் தர்ஜ்ஜுமா, நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சிறக்க பாடுபட்ட பள்ளி நிர்வாகம், PEC social wing அமீர் ஜனாப். சாகீர் கான், கண் சிகிச்சை […]
450 Womens received PEC’S Help |
அஸ்ஸலாமு அலைக்கும், நண்பர்களே, சகோதரர்களே இன்று பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொள்ளாச்சி பகுதி இஸ்லாமியப் பெண்களுக்கு அவர்கள் சிறு வியாபாரம் செய்து வாழ்கையில் முன்னேறிக் கொள்ளத் தமிழக அரசின் முஸ்லீம் உதவும் சங்கத்தின் மூலம் அடிப்படை முதலீட்டுத் தொகையை( seed capital ) வழங்கியது. இதில் இது வரை சுமார் 450 பெண்கள் பயனடைந்து உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இத்தகைய சேவைகளைச் செய்ய உதவியாக இருந்த கொடையாளர்கள்,அரசு அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், உலமாக்கள், ஜமாத்தார்கள், இயக்கங்கள், அமைப்புகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நம் சேவை பயணம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் துவாவுடனும் தொடரும் இன்ஷா அல்லாஹ்
Food Help- Srilankan Refugees |
14.09.2022 அஸ்ஸலாமு அலைக்கும். இன்று அழகிய முன் மாதிரி அறக்கட்டளையின் பசியாற்றுவோம் திட்டத்திற்கு 10 இலங்கை வாழ் இஸ்லாமியக் குடும்பங்களின் உணவு தேவைக்காக ரூ 5000 பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மூலம் வழங்கப்பட்டது. Thanks to the donar doctor,PEC member
Medical Aid |
அஸ்ஸலாமு அலைக்கும். 65 வயதான மீன் வியாபாரி, இவர் open Heart surgery செய்துள்ளார். அதனால் வாரத்தில் இரண்டு நாள் தான் வியாபாரத்திற்குச் செல்ல முடிகிறது. இவருக்கு மாதம் ரூ 800 க்கு மருந்து உட் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக உதவி கோரினார். 3 மாத மருந்து செலவுக்கான தொகை Rs 2500 PEC-ஆல் வழங்கப்பட்டது.
Medical Aid |
15.06.2022 ஆனைமலையைச் சேர்ந்த அம்சத் பீவி என்ற வயதான பெண்மணி ஒருவர் 2017 முதல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுப் பல முறை கீமோ சிகிச்சையை ஆசீர்வாதம் மருத்துவமனை மதுரையில் மேற்கொண்டு தற்போது நன்றாக உள்ளார்கள். இவருக்கு உதவும் நிலையில் அவரது குடும்பத்தினர் இல்லாத நிலையில் பலரும் அவரது சிகிச்சைக்காக உதவியுள்ளார்கள். மேலும் ஆசீர்வாதம் மருத்துவமனையும் குறைந்த செலவில் நல்ல சிகிச்சை கொடுத்துள்ளார்கள். கொரானா காலத்தில் சிகிச்சைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது review – க்கு செல்ல தேவையான நிதி உதவி ரூ 7000 PEC-ஆல் வழங்கப்பட்டது. Thanks to donars 1) Mr.Arun 2) Janab.Wasim3) Janab. Irshad
Psychological Counselling |
10.06..2022 அஸ்ஸலாமு அலைக்கும். வெள்ளிக்கிழமை( 10.06..2022 ) ஜும்மா வில் மஸ்ஜிதே முஹம்மது பள்ளி பொள்ளாச்சியில் Dr. அபுபக்கர் சித்தீக் , Psychologist அவர்கள் மன நலன் பேணுவது குறித்தும், மாணவர்கள் கல்வியில் கவனம் சிதறாமலும் , மனதை இலக்கை நோக்கி ஒருமுகப்படுத்தி வெற்றிபெறுவது குறித்தும் 10 நிமிட உரையாற்றினார்கள். அல்லாஹ் காட்டிய பாதையில் சென்று சமுதாயம் இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றியடைவதை நாம் உறுதி செய்யவேண்டும். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு . இன்ஸா அல்லாஹ் நமது பயணம் சீரிய பாதையில் தொடரட்டும் துவா செய்யுங்கள். Dr. அபுபக்கர் சித்தீக் அவர்கள் விரைவில் நமது PEC அலுவலகத்தில் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக ( இயலாதவர்களுக்கு) மன […]
Tricycle to Alternative Ability Person |
A request comes from alternative ability person from Udumalpet We donated the Tricycle to him..