02.01.2022 அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹ்வின் கிருபையால் இன்று இராமபட்டிணம் மஸ்ஜீதே முஹையித்தீன் பள்ளிவாசல் மற்றும் PEC women Forum இணைந்து நடத்திய மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. 61 நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாம் சிறக்க உதவிய பள்ளி நிர்வாகத்தினர், ஜமாத்தார்கள், PEC உறுப்பினர்கள், Dr. Fousa and her mediCal Team , கொடையாளர்கள் மற்றும் துவா செய்த சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
Author Archives: pecadmin
Medical Camp by PEC |
நாள்:28/11/2021 ஞாயிற்றுக்கிழமை. காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணிவரை பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் மகளிர் மன்றம் மற்றும் மஸ்ஜிதே ரஹ்மானியா காலனி பள்ளிவாசல் இணைந்து நடத்திய “மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான” இலவச மருத்துவ முகாம் அல்லாவின் கிருபையால் நல்லபடியாக நடைபெற்றது. விழாவை காலனி பள்ளிவாசல் முத்தவல்லி ஜனாப்.A.பத்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி தந்தார்கள். ஹாேமியோ மருத்துவ முகாமை திரு.S.சந்திரமோகன் அவர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் சூளேஸ்வரன்பட்டி துவக்கி வைத்தார்கள். பல் மருத்துவ முகாமை திரு.N.கார்த்திகேயன் அவர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் சூளேஸ்வரன்பட்டி துவக்கி வைத்தார்கள். ஹோமியோபதி மருத்துவ முகாமில் 64 மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. பல் மருத்துவ முகாமில் 25 […]
Seed Funding to Women Entrepreneurs |
Date : 15.11.2021 அஸ்ஸலாமு அலைக்கும். பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர்,முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் இணைந்து இஸ்லாமியப் பெண்களுக்கான , சிறு தொழில் செய்யவும், ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும் நிதி உதவி( seed capital ) வழங்கும் நிகழ்ச்சி ஆலிவ் கிட்ஸ் இஸ்லாமிக் பள்ளி, பொள்ளாச்சியில் நடைபெற்றது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் PEC – ன் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். முகைதீன் மாலிக், MWAS அமீர் மற்றும் Olive School தாளாளர் ஜனாப். சையத் முகமது, PEC Startup coordinator ஜனாப் . சம்சுதீன் , சமூகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜனாப் . சாகிர் கான் , கொடையாளர் ஜனாப். ஜாகிர் மற்றும் PEC women Forum member Mrs. Thasneem, MWAS Honorary secretary. Janab. shahul Hameed ஆகியோர் கலந்து கொண்டனர் . சிறப்பு விருந்தினராகத் திருமதி. சபரி […]
Job placement to Er.Ponmudi |
One Mrs. Er.Ponmudi was recommended by PEC for a job with Anish Builders. She got the job today and Thanked PEC
Medical Aid To 14year Girl at Unjavelampatty |
அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர்களே, சகோதரர்களே, மீண்டும் ஒரு முறை துயரத்திற்குத் தோல் கொடுக்க உங்களை அழைக்கிறோம். மின் நகர் மெளகல்லாவை சேர்ந்த ரபிக் என்ற சகோதரரின் மகள் அஸ்மா அவர்கள் நடந்த ஒரு விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவு இல்லா நிலையில் இப்போது கோவை FIMS Hospital -ல் ICU -ல் சிகிச்சையில் உள்ளார்கள். இவர்களிடம் அரசின் இன்ஸ்யூரன்ஸ், தனிப் பட்ட இன்ஸ்யூரன்ஸ் , ஏனைய குழு இன்ஸ்யூரன்ஸ்களோ இல்லை. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ 25000 வரை செலவாகிறது. குறைந்தது 1 வாரமாவது மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளார்கள். அல்லாஹ்வின் பேர் அருளால் அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று வர நாம் அனைவரும் இப்போதே துவா செய்வோம். Thanks to all for your Dua and Financial support . Full name not given based on […]
Medical Help |
அஸ்ஸலாமு அலைக்கும், பொள்ளாச்சியைச் சேர்ந்த இப்ராகிம் , ( பெயின்டர்) அவரது மகள் பாத்திமா (special child ) கடந்த 6 வருடங்களாக மூளை வளர்ச்சி குறைபாடு காரணமாகச் சிகிச்சை செய்து வருகிறார்கள். இதுவரை இலவசமாகவும், குறைந்த செலவிலும் சிகிச்சை பெற்று வந்தார்கள். தற்போது இன்று மூளையில் ஒரு அறுவைசிகிச்சை கேரளா சித்ரா திருநல் மருத்துவ மனையில் நடைபெறுகிறது. அதற்கு ரூ 140000 /- ம் செலவாகிறது. அதில் ரூ 50000/ ஐ அவர்கள் தயார் செய்த நிலையில் ரூ 95000 ஐ நமது PEC உறுப்பினர் ஒருவர் மருத்துவமனைக்குச் செலுத்திவிட்டார்கள். கொடையாளரின் நல்ல உள்ளத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அறுவைசிகிச்சை வெற்றி பெட்று குழந்தை விரைவில் குணமடைய அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் இன்ஸா அல்லாஹ்
Education Fund |
நண்பர்களே அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் நம்மால் அவ்வப்போது நமது சகோதர சகோதரிகளின் சில முக்கிய பொருளாதார தேவைகளுக்காக உதவ முடிகிறது. அல்லாஹ் நம் எல்லோரையும் கொடுக்கும் நிலையிலேயே வைத்திருப்பானாக. ஆமின். தற்போது பாத்திமா என்ற மாணவி +2 -ல் 565/600 மதிப்பெண் எடுத்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ECE படிப்புக்கான இடம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கான ஒரு வருடக் கல்விக் கட்டணம் ரூ 125000 மாக உள்ளது . இதில் இதுவரை ரூ 77500 அவரது தந்தையின் முயற்சியில் பல் வேறு கொடையாளர்களின் உதவியால் பெறப்பட்டு விட்டது. மீதி ரூ 47500 ஐ அவர் திங்கள் கிழமை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும். தீர விசாரித்த வரையில் குடும்பத்தினரிடம் எந்த பொருளாதாரமும் இல்லை. […]