அஸ்ஸலாமு அலைக்கும்,
நண்பர்களே, சகோதரர்களே இன்று பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் மற்றும் பொள்ளாச்சி எக்கனாமிக் சேம்பர் அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொள்ளாச்சி பகுதி இஸ்லாமியப் பெண்களுக்கு அவர்கள் சிறு வியாபாரம் செய்து வாழ்கையில் முன்னேறிக் கொள்ளத் தமிழக அரசின் முஸ்லீம் உதவும் சங்கத்தின் மூலம் அடிப்படை முதலீட்டுத் தொகையை( seed capital ) வழங்கியது. இதில் இது வரை சுமார் 450 பெண்கள் பயனடைந்து உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இத்தகைய சேவைகளைச் செய்ய உதவியாக இருந்த கொடையாளர்கள்,அரசு அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், உலமாக்கள், ஜமாத்தார்கள், இயக்கங்கள், அமைப்புகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நம் சேவை பயணம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் துவாவுடனும் தொடரும் இன்ஷா அல்லாஹ்