Psychological Counselling


10.06..2022

அஸ்ஸலாமு அலைக்கும்.

வெள்ளிக்கிழமை( 10.06..2022 ) ஜும்மா வில் மஸ்ஜிதே முஹம்மது பள்ளி பொள்ளாச்சியில் Dr. அபுபக்கர் சித்தீக் , Psychologist அவர்கள் மன நலன் பேணுவது குறித்தும், மாணவர்கள் கல்வியில் கவனம் சிதறாமலும் , மனதை இலக்கை நோக்கி ஒருமுகப்படுத்தி வெற்றிபெறுவது குறித்தும் 10 நிமிட உரையாற்றினார்கள்.

அல்லாஹ் காட்டிய பாதையில் சென்று சமுதாயம் இம்மை மறுமை ஈருலகிலும் வெற்றியடைவதை நாம் உறுதி செய்யவேண்டும். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு .

இன்ஸா அல்லாஹ் நமது பயணம் சீரிய பாதையில் தொடரட்டும் துவா செய்யுங்கள். Dr. அபுபக்கர் சித்தீக் அவர்கள் விரைவில் நமது PEC அலுவலகத்தில் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக ( இயலாதவர்களுக்கு) மன நல மருத்துவ ஆலோசனை மற்றும் pre and post marrital counseling சேவையைத் தர உள்ளார்கள்.
நம் சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் PEC சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம் இன்ஸா அல்லாஹ்

வஸ்ஸலாம்

இப்படிக்கு
Health vertical
PEC சமூக மேம்பாட்டுக் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *